புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி பல்டி அடித்துள்ளார். முன்னர் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலாக, புதிய அறிக்கை ஒன்றை, நேற்று தாக்கல் செய்தார். அதில், "இந்திய ராணுவ வீரர்களின் கொடூர படுகொலைக்கு, பாக்., ராணுவமே காரணமே' என, குற்றம் சாட்டினார்.புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர், ஏ.கே.அந்தோணி பல்டி அடித்துள்ளார். முன்னர் தாக்கல் செய்த அறிக்கைக்குப் பதிலாக, புதிய அறிக்கை ஒன்றை, நேற்று தாக்கல் செய்தார். அதில், "இந்திய ராணுவ வீரர்களின் கொடூர படுகொலைக்கு, பாக்., ராணுவமே காரணமே' என, குற்றம் சாட்டினார்.
ஜம்மு - காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடந்த செவ்வாயன்று, இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த, பாக்., ராணுவத்தினர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ராணுவ வீரர்கள் ஐந்து பேரை சுட்டுக் கொன்றனர். அன்றைய தினம், இது தொடர்பாக, அறிக்கை சமர்ப்பித்த, ராணுவ அமைச்சர் அந்தோணி, "பாக்., ராணுவ உடையில் வந்த, பயங்கரவாதிகளே, இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என, தெரிவித்தார்.இதற்கு, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் பலவும், கடும் கண்டனம் தெரிவித்தன. "பாகிஸ்தான் ராணுவத்திற்கு, நல்ல பெயர் பெற்றுத் தரும் வகையில், அந்தோணியின் அறிக்கை உள்ளது' என்றும் விமர்சித்தன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் அந்தோணி நேற்று, புதிய அறிக்கை ஒன்றை, பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கு, பாக்., ராணுவமே காரணம். பாக்., ராணுவத்தின் இந்தச் செயலால், அந்நாட்டுடனான உறவுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு விஷயத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளில், பாதகமான விளைவுகள் ஏற்படும். பாக்., ராணுவத்தின் சிறப்புப் படையினரே, எல்லை தாண்டி வந்து, இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளனர். இது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் புனிதத்தை காப்பதிலும், ராணுவத்தின்